தெவுந்தர விஷ்னு தெவாலயம்

மாத்தறை தங்காலை வீதியில் 6 கி.மீ. தொலைவில் அமைந்த தெவிநுவர ரஜமகா பூமியிலேயே இந்த உபுல்வன் எனும் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயம் அக் கடவுளுக்காகவே ஆக்கப்பட்டது என மதிக்கப்படுகின்றது.
தப்புல எனும் அரசன் (கி.பி. 660 – 644) உபுல்வன் கடவுளுக்காகவே இந்த தேவாலயம் செய்ததாக நம்பப்படுகின்றது. கோட்டை காலத்தில் எழுதப்பட்ட சந்தேச காவியங்களில் அனேகமாக இந்த உபுல்வன் (விஷ்னு) தேவாலயத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது. உபுல்வன் தேவாலயத்திலுள்ள கடவுள்களின் சிலைகளைப் போலவே சித்திரங்களும் விசேஷமாகும். அலுத்நுவர கடவுள், சமன் எனும் கடவுள், பத்தினிக் கடவுள், வள்ளி அம்மை, தெவொல் எனும் தெய்வத்தின் போன்றவையின் சிலைகள் அதற்குள் காணக் கிடைக்கின்றது. தேவாலயத்தின் உள்புற விராந்தையில் தசாவதாரம், சிவ, கநேஷ், பத்தினி, சிவ வடுக, சித் தாண்டவ, 12 ராசிகள், நவக்கிரகங்கள் போன்றவையின் சித்திரங்களும் உண்டு.

வெள்ளிக்கிழமை, 03 ஆகஸ்ட் 2012 05:07 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது