முகப்பு அகழ்வு

அகழ்வு

அகில இலங்கையிலும் தொல்பொருளியல் மரபுரிமைகள் தொடர்பாக ஆய்வு செய்யும் பொருட்டு 1968ஆம் ஆண்டில் இப்பிரிவு அமைக்கப்பட்டது.

அகழ்வு பிரிவின் கடமைகளைச் சுருக்கமாகப் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டமுடியும்.

ஆய்வுக்கான அகழ்வுகள்

அகழ்வுகளுக்குப் பின் பகுப்பாய்வு

  • அகழ்வுப் பொருட்களைப் பகுப்பாய்வு செய்தல்.
  • அறிக்கைகள் எழுதுதல்.
  • சுவடிகள் பாதுகாப்பு அறிக்கைகளைத் தயாரித்தல்.
  • களஞ்சியப்படுத்தல்.
  • அகழ்வு அறிக்கைகள் பூர்த்தியடைந்ததன் பின்னர் அனைத்து அகழ்வுப் பொருட்களையும் களஞ்சியப்படுத்துதல், ஆய்வு மற்றும் கண்காட்சிப் பணிகளின் பொருட்டு அரும்பொருட்காட்சிச்சாலை பிரிவில் ஒப்படைத்தல்.

இலங்கையில் அகழ்வு வரலாறு

தொல்பொருளியல் திணைக்களத்தில் முதல் முறையாக ஒழுங்கு முறையான அகழ்வு எஸ்.எம். பரொஸ் அவர்களால் 1884 முதல் 1886 வரையிலான காலப்பகுதியில் அநுராதபுரம், பொலனறுவை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் எச்.சி.பி. பெல் அவர்களின் தலைமையில் 1890ல் ஆரம்பிக்கப்பட்ட தொல்பொருளியல் திணைக்களத்தின் ஆய்வு மற்றும் அகழ்வுப் பணிகள் முக்கியமாக அநுராதபுரம், சீகிரியா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் அநுராதபுரத்திலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் தொல்பொருளியல் அகழ்வுப்பணிகள் ஈ.எம். அயர்ட்டன் (1912 - 1914), ராஜா த சில்வா (1968) ஆகியோரின் வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டது.

1926ஆம் ஆண்டில் இலங்கையில் தொல்பொருளியல் ஆணையாளராக நியமனம் பெற்ற ஏ.எம். ஹொகார்ட் அவர்களால் மாதொட்ட, பொம்பரிப்பு, அநுராதபுர எத்துல்நுவர, அம்பலாந்தொட்ட போன்ற இடங்களில் மண் படிவுகளுக்கு ஏற்ப அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலே

வரலாற்றுக்கு முற்பட்ட ஆய்வுக்கான அகழ்வுகள்.

அகழ்வுப் பிரிவின் மூலம் இற்றைவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் வரலாற்றுக்கு முற்பட்ட மரபுரிமை இற்றைக்கு 125,000 ஆண்டுகளுக்கு முன் பரவிச் செல்கின்றது என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்போது செம்மண், மணல் படிமங்கள் விரிவடைந்து சென்ற இலங்கையின் வடக்கு, தெற்கு மற்றும் வடமேற்கு கடற்பிரதேசம் மிகமுக்கியமானதாகும். 1972ஆம் ஆண்டில் புந்தல, பத்திராஜவெல ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளிலிருந்து வரலாற்றுக்கு முற்பட்ட மனித குடியேற்றத்திட்டங்களின் முக்கியமான இரண்டு காலகட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

  1. மத்திய புராதன கற்காலத்திற்குரிய அதாவது, இற்றைக்கு சுமார் 125,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனித வர்க்கத்தினரால் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகள் கிடைத்துள்ளன. ஆனால் இங்கு மானிட எச்சங்கள் கிடைக்கவில்லை.
  2. இற்றைக்கு சுமார் 28,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதிக்குரிய மானிடக் குடியேற்றத்திட்ட காலகட்டம், இது மத்திய கற்காலத்திற்குரியதாகும். மானிடர்களின் அல்லது விலங்குகளின் எச்சங்கள் இல்லாவிட்டாலும்கூட கேத்திரகணித வடிவுடைய நுண்ணிய கற்கருவிகள் பெருந்தொகையாகக் கிடைத்துள்ளன.

அத்துடன் வரலாற்றுக்கு முற்பட்ட குகைகளில் நவீன மானிடர் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மானிடர் தொடர்பான சந்தேகமற்ற காரணிகள் குகை குடியேற்றத்திட்டங்கள் மூலமே கிடைக்கின்றன. இற்றைக்கு 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நவீன மானிடனின் வாழ்க்கை முறை, வித்தை முறைகள், தொழில்நுட்பம் போன்றவை பற்றிய விரிவான தகவல்கள் கிடைத்துள்ளன.

இவ்வாய்வுப் பணிகள் முதல் முறையாக 1979ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே மேற்கொள்ளப்பட்டன. அதன்போது மூன்று கற்குகைகள் அகழ்வுக்குட்படுத்தப்பட்டன.

  • குருவிட்ட பட்டதொம்ப குகை.
  • ஹொரண பாஹியன் குகை.
  • கேகாலை சாம்பல் குகை.

இவ்வகழ்வுக் கருத்திட்டங்களின் பெறுபேறுகள் கலாநிதி சிரான் தெரணியகல அவர்களின் "The Prehistory of Sri Lanka" மற்றும் கலாநிதி உக்கியக விஜயபால அவர்களின் "New light on the prehistory of Sri Lanka" ஆகிய நூல்களில் வெளியிடப்பட்டுள்ளன. அண்மையில் இத்தகவல்களை காலத்திருத்தம் செய்வதற்காக 2005ஆம் ஆண்டில் பட்டதொம்ப குகை, கித்துல்கல பெலி குகை, பெல்லன்பெந்தி பெலஸ்ஸ போன்ற இடங்களில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடர்பாக, குறிப்பாக கரையோர ஈரவலயத்தில் கற்குகைகள் சார்ந்த ப்ளயொஸ்டசீன காலம் முதல் மத்திய ஹொலசீன காலம் வரையில் வாழ்ந்த நவீன மானிடன் தொடர்பாக ஆய்வுத் தகவல்களை உள்ளடக்கி 2010ஆம் ஆண்டில் கலாநிதி நிமல் பெரேரா இங்கிலாந்தில் "Bar International Series" 2142ன் கீழ் "Prehistory of Sri Lanka" நூலை வெளியிட்டுள்ளார். இப்புதிய ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையில் குகை குடியேற்றத் திட்டம் இற்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கப்பால் விரிந்து செல்கின்றது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வறண்ட வலய மiழைக்காடுகள் இருந்தன என்பதற்கான காரணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தெற்காசியாவில் வாழ்ந்த ஆதிமனிதன் பற்றிய காரணிகளும் பட்டதொம்ப குகையிலும் பாஹியங்கல அருகிலும் கிடைத்திருக்கின்றன. இவ்வாதிகால மனிதனின் மிகச் சிறிய கற்கருவிகள் தொழில்நுட்பம், வித்தை முறைகள், உணவுப் பழக்கவழக்கங்கள் போன்றவை தொடர்பாக மிகமுக்கியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

நவீன மானிடன் தொடர்பாகக் கலந்துரையாடுகின்ற போது ஆபிரிக்காவிலிருந்து வெளியேறல் கோட்பாட்டை தொல்பொருள் விஞ்ஞானிகள் மிக முக்கியமானதாகக் கருதுகின்றனர். இதன்போது சுமார் ஒரு இலட்சம் வருடங்களுக்கு முன்னர் நவீன மானிடன் ஆபிரிக்காவின் கிழக்கில் தோன்றி இற்றைக்குச் சுமார் 80,000 ஆண்டுகளுக்கு முன்னர் சீனாஹி குடா நாட்டின் ஊடாக ஒரு பகுதியினர் ஐரோப்பாவுக்கும் இன்னுமொரு பகுதியினர் ஆசியாவினூடாக அவுஸ்ரேலியாவுக்கும் விரிவடைந்து சென்றுள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர். இதில் மிகமுக்கியமானது தெற்கு நுழைவுப்பாதை என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும். அதன்போது சீனாஹியிலிருந்து அரபிக் கரையோரமாக இலங்கை, மலேசியா, இந்தோனேசியா ஊடாக அவுஸ்ரேலியாவுக்குக் குடிபெயர்ந்துள்ளனர். அதன் பிரகாரம் நவீன மானிடனின் புராதன காரணிகள் தெற்காசியாவில் இலங்கையிலிருந்து கிடைத்துள்ளது.

இற்றைவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் பிரகாரம் இலங்கையின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் தகவல்கள் பல கருப்பொருட்களில் கிடைக்கின்றன.

  1. இரணமடு மண்ணை ஒழுங்குசெய்தல் - இவை வடக்கு, தெற்கு, வடமேல் கரையோரத்தில் விரிவடைந்திருக்கின்றது.
  2. கற்குகைகள் - நாடு முழுவதிலும் பரவலாக இருக்கின்ற அதேநேரத்தில் கரையோர ஈரவலயத்தின் தென்மேற்கு கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை போன்ற மாவட்டங்களில் மேலதிகமாகப் பரவிச் செல்வதைக் காணமுடிகிறது.
  3. வரலாற்றுக்கு முற்பட்ட திறந்த வெளி இடங்கள் - பெல்லன்பெந்தி பெலஸ்ஸ. இவ்விடம் 2005ஆம் ஆண்டில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் மூலம் இற்றைக்கு சுமார் 13,000 ஆண்டுகள் பழைமையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  4. செந்நிற கபிலநிற மண்வலயம் - உலர் வலயத்தில் இயல்பாக இருக்கின்ற மண் வலயம். வரலாற்றுக்கு முற்பட்ட இடங்கள் இலட்சக்கணக்கில் விரிவடைந்துள்ளன. அநுராதபுர எத்துல் நுவர இற்றைக்கு சுமார் 5,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என இதன்போது விஞ்ஞான ரீதியாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  5. வரலாற்றுக்கு முற்பட்ட சிப்பி படிமம் - ஹூங்கம மினி எத்திலிய பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது வரலாற்று காலத்திற்கு முற்பட்ட இவ்விடம் இற்றைக்கு சுமார் 2,800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  6. மாதொட்ட - இலங்கையின் கற்காலத்தின் இறுதிக் காலப்பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இவ்விடம் இற்றைக்கு சுமார் 1,800 வருடங்கள் பழைமை வாய்ந்தது என விஞ்ஞான ரீதியாக காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் கற்குகைகளின் தகவல்களைக் காலத்திருத்தம் செய்வதற்காக 2007ஆம் ஆண்டில் ஹொரண பாஹியன்கல அகழ்வு கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம், 1986ஆம் ஆண்டில் கலாநிதி விஜயபால அவர்கள் மேற்கொண்ட அகழ்வு வேலையை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காலத்திருத்தம் செய்வதாகும். இதன்போது முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட 4 மண் படிநிலைகளை மிக நுணுக்கமாகப் பகுப்பாய்வு செய்ததை அடுத்து நூறு படி நிலைகளுக்கு மேல் அவை பரவிச் செல்கின்றன என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இக்கருத்திட்டம் ஸ்கொட்லாந்தின் ஸ்டாலின் பல்கலைக்கழகத்தின் தொல்புவிச்சரித பௌதிக பிரிவின் பேராசியர் இயன் சிம்சன் அவர்களின் ஆய்வு பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுகின்றது. இதில் பின்வருவன அடங்குகின்றன.

  • நுணுக்கமான மண் பற்றிய ஆய்வு.
  • மெல்லிய மண் படிமங்களைப் பற்றிய பகுப்பாய்வு.
  • மகரந்தப் பகுப்பாய்வு.
  • மிகச் சிறிய கற்கருவிகள் பற்றிய ஆய்வு.
  • கற்கருவிகளின் உற்பத்தி தொழில்நுட்பம்.
  • விலங்கு எச்சங்களின் பகுப்பாய்வு.

மேலே

வரலாற்றுக்கு முற்பட்ட ஆய்வுக்கான அகழ்வுகள்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திற்கும் வரலாற்றுக் காலத்துக்கும் இடைப்பட்ட காலம் இதுவாகும். இந்தக் காலம் முன்னேற்றமடைந்த கலாசார அம்சங்களைப் பிரதிபலிக்கின்றது. இக்காலத்தில் இலங்கையில் எழுத்து பயன்பாடு தொடர்பான காரணிகள் இல்லாவிட்டாலும்கூட முன்னேற்றகரமான மட்பாண்ட தொழில்நுட்பம், விலங்குகளைப் பழக்குதல், இரும்பு பயன்பாடு, தானியப் பயிர்ச்செய்கை போன்றவை தொடர்பான காரணிகள் கிடைக்கின்றன. இற்றைவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம் இக்காலம் கி.மு. 1,300ல் ஆரம்பமாகி கி.மு. 250 வரை விரிவடைந்துள்ளது என்பது தெளிவானதாகும். இது வரலாற்றுக்கு முற்பட்ட இரும்பு யுகம் எனக் குறிப்பிடப்படுகின்ற அதே நேரத்தில் இதில் உள்ள சிறப்பம்சம் யாதெனில், மயான கலாசாரம் விரிவடைந்ததாகும். இந்த பிரபலமான கலாசார அம்சம் பொம்பரிப்பு, யாப்பஹூவ, கொக்அபே, யட்டிகல்பொத்த (கி.மு. 750) இப்பன்கட்டுவ (கி.மு. 700) கலோட்டுவா (கி.மு. 250) ரஞ்சாமடம (கி.மு. 1,300) ஆகிய அகழ்வு தொகுதிகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இம் மயான கலாசாரம் ஆரம்ப வரலாற்றுக் காலத்தின் இறுதிப் பகுதிவரையும் விரிவடைந்து சென்றுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலே

ஆரம்ப வரலாற்றுக் காலம்.

இக்காலத்தின் மிகமுக்கிய இடங்களாக,

  • அநுராதபுர எத்துல்புர.
  • திஸ்ஸமஹாராம.
  • கந்தரோடை.

என்பவற்றைக் காட்டமுடியும்.

அநுராதபுர எத்துல்புரய

கி.மு. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 11 வரையிலான வரலாற்று ரீதியான காலப் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதை யுனெஸ்கோ சபை உலக மரபுரிமை நகரமாகவும் தெரிவுசெய்துள்ளது. ஆரம்பத்திலேயே இங்கு அகழ்வுப் பணிகள் 1969ஆம் ஆண்டில் கலாநிதி சிரான் தெரணியகல அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான விரிவான அறிக்கை "Ancient Ceylon Vol II" ல் வெளியிடப்பட்டுள்ளது. இதில்,

  • கலாசார காலகட்டங்கள் தொடர்பாக.
  • மட்பாண்டம், இரும்பு தொழில்நுட்பம் தொடர்பாக.
  • வாழ்க்கை முறை தொடர்பாக.
  • நகர நிர்மாணம் தொடர்பாக விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

றுஹூணு பிரதேசத்தின் வரலாற்று ரீதியான நிலையை தொல்பொருள் ரீதியாக உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவே இவ்வகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இது கி.மு. 1000 என காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளைச் சார்ந்ததாக "Ancient Ruhunu" நூலின் I ஆம் பாகமும் II ஆம் பாகமும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அதே நேரத்தில் III ஆம் பாகம் 2011ம் ஆண்டின் இறுதிப் பகுதியிலும் IV ஆம் பாகம் 2012ஆம் ஆண்டிலும் வெளியிடப்படவிருக்கின்றது.

கந்தரோடை

கந்தரோடையும் மிக முக்கியமான இடமாகும். இங்கு 1940ல் பி.ஈ.பி தெரணியகல அவர்களால் முதல்முறையாக அகழ்வு வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பின்னர் இங்கு 1972ஆம் ஆண்டில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லியும் பெனட் புரொன்சனும் தொல்பொருளியல் திணைக்களத்துடன் மேற்கொண்ட ஒத்துழைப்பு அகழ்வு ஆய்வு கருத்திட்டமாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

இதன் முக்கிய நோக்கம் அநுராதபர எத்துல்புரவுக்கு இணையாகக் கந்தரோடை மண்படிவுகள் தொடர்பாக கருத்தைப் பெற்றுக்கொள்வதாகும். அப்போதிருந்த அகழ்வு தொழில்நுட்பத்தின் பிரகாரம் இதுதொடர்பில் ஒரு பகுதியாக கருத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த அதேநேரத்தில் அதன்போது இந்த இடம் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் ஆரம்பமானது என்பது கண்டறியப்பட்டது. இக்குறைபாடுகளைத் தவிர்த்துக்கொள்வதற்குத் தொல்பொருளியல் திணைக்களத்தின் மூலம் 2011ஆம் ஆண்டில் விஞ்ஞான ரீதியான அகழ்வு ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது ஆரம்ப வரலாற்றுக் குடியேற்றத் திட்டத்தின் முதல் குடியேற்றத்திட்ட காலகட்டமும் அதன் பின்னர் குடியேற்றத்திட்டப் படிவுகளின் வரிசைக் கிரமத்தைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றிற்கு விஞ்ஞான ரீதியாகக் காலத்தை நிர்ணயிப்பது இதன் பிரதான நோக்கமாகும்.

மேலே

நினைவுச்சின்ன அகழ்வுகள்

நாட்டின் முதன்மையான தேசிய தேவைகளின் பிரகாரம் தாதுகோபுரம் போன்ற மத நிலையமொன்றைப் பாதுகாப்பதற்கு முன்னர் அவ்விடத்தின் முதல் கட்டிட காலகட்டங்கள் மற்றும் பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்புக் காலகட்டங்கள் பற்றிய கருத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஒழுங்கு முறையான ஆய்வுக்கான அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது தொல்பொருளியல் திணைக்களத்தின் கொள்கையாகும். நாம் கடந்த காலத்தில் முக்கியமான இரண்டு இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டோம்.

01. திஸ்ஸமஹாராம சந்தகிரிய தாதுகோபுர அகழ்வு
இத்தாதுகோபுரம் முறைசாராத புனரமைப்புக் பணிகளின் காரணமாக திடீரென வெடிப்புக்குள்ளானது. இது நாட்டின் தேவையாக இருந்ததனால் புனரமைப்புக்கு முன்னர் தாதுகோபுரத்தின் முதல் கட்டிட காலகட்டத்தையும் அதன் பின்னர் நிகழ்ந்த புனரமைப்புக் காலகட்டத்தையும் பற்றிக் கண்டறியும் பொருட்டு ஆய்வுக்கான அகழ்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் இலங்கையின் மிக முக்கியமான கலாசார வரலாறு பற்றிய விடயங்களைக் கண்டறிய முடிந்தது. அக்காலத்தில் வாழ்ந்த மானிடர் உணவாகப் புசித்த விலங்குகளின் எச்சங்களும் கல் ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்பட்டதால் இவ்விடம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக் குடியேற்றத் திட்டம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதன்போது காலத்தை நிர்ணயிப்பதற்கான மாதிரிகள் இல்லாததன் காரணமாக விஞ்ஞான ரீதியாக நாட்களை நிர்ணயிக்க முடியாமற்போனது. அதன்பின்னர் குடியேற்றத்திட்ட இடைவெளியும் கி.மு. 900 காலத்துக்குரிய வர்ண மட்பாண்டங்கள் மற்றும் இரும்பு தொழில்நுட்பம் தொடர்பான கருத்தும் பெறப்பட்டது. அத்துடன் வமிச கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மகாநாக மன்னரால் இத்தாதுகோபுரம் நிர்மாணிக்கப்பட்டதற்கான தொல்பொருளியல் காரணிகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின் பிரகாரம் இந்த இடம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு உரியது என்பது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
02. தெலிவல கொற்ற வெஹெர தாதுகோபுரம்
இந்த அகழ்வின் போதும் தாதுகோபுரத்தின் ஆரம்ப காலகட்டம் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குரியது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதல் உள்ள இன்னொரு சிறப்பம்சம் யாதெனில், அகழ்வின்போது மிகமிகப் பாதுகாப்பாக இருந்த கர்ப்பக்கிரகமாகும். இதன்போது பல தொல்பொருள் காரணிகள் தோன்றியதோடு துணிகள், கண்ணாடி மணிகள், முத்து மணிகள் பிடிக்கப்பட்ட துணியினால் சுற்றப்பட்ட சிறிய சைத்தியம் மிகமுக்கியமானதாகும். தொல்பொருளியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணிகள் தொடர்பான நிபுணர் திருமதி ஜூடித் கெமரன் இதுபற்றிய இரசாயன ஆய்வுகளை மேற்கொள்கின்ற அதேநேரத்தில் இத்துணி பட்டுத்துணி எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2011 ஆண்டில் அகழ்வுப் பிரிவினால் மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ள அகழ்வுக் கருத்திட்டங்கள்.

  • வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து ஆய்வுக்கான அகழ்வுகள் - ஹொரண பாஹியன் குகை.
  • வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து திறந்த வெளி இடங்கள் - பெல்லன் பெந்தி பெலஸ்ஸ.
  • வரலாற்று ரீதியான அகழ்வுகள் - அநுராதபுர எத்துல்நுவர (உள் நகரம்).
  • ஆரம்ப வரலாற்று கால அகழ்வுகள் - மகாகல்வௌ மெகலிதிக மயான அகழ்வு.
  • அகழ்வுகளின் பின்னர் பகுப்பாய்வுப் பணிகளும் அறிக்கைகளை எழுதுதலும்.

மேலே

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2011 06:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது