முகப்பு தொல்பொருளியல் சேவைகள்

தொல்பொருளியல் சேவைகள்

தொல்பொருளியல் சேவைகள்

 

பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல்

  • வெளியீட்டு விற்பனை நிலையம்.
    திணைக்கள வெளியீடுகள், பட அட்டைகள், கையேடுகள் என்பவற்றைக் கொள்வனவு செய்யமுடியும். விற்பனை நிலையம் சனி, ஞாயிறு, அரச பகிரங்க விடுமுறை தினங்கள் என்பவற்றைத் தவிர்த்து ஏனைய நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை திறந்திருக்கும்.

  • நூலகம்
    நூலகம் சனி, ஞாயிறு, அரச பகிரங்க விடுமுறை தினங்கள் என்பவற்றைத் தவிர்த்து ஏனைய நாட்களில் மு.ப. 9.00 மணி முதல் பி.ப. 3.00 மணி வரை திறந்திருக்கும். இது ஆய்வு நூல்நிலையமாகும்.

  • கருத்தரங்குகள்
    கருத்தரங்குகளுக்காக முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் / பணிப்பாளர் (பொது சேவை) அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

  • நடமாடும் கண்காட்சி
    கண்காட்சிப் பொருட்கள் மற்றும் செய்திப் பலகைகள் உள்ளடக்கப்பட்ட நடமாடும் கண்காட்சியொன்றை திணைக்களம் ஒழுங்கு செய்கின்றது. இதற்காக முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் / பணிப்பாளர் (பொதுசேவை) அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

மேலே

வீடியோ / புகைப்படக் கருவி உத்தரவுப் பத்திரம்

புகைப்படம் / வீடியோ படம் எடுப்பதற்காக முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் 03 நாட்களுக்கு முன்னர் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் / பணிப்பாளர் (பொதுசேவை) அவர்களிடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

மேலே

தொல்பொருளியல் தாக்கங்களை மதிப்பீடு செய்யும் ஆய்வு

அபிவிருத்திக் கருத்திட்டங்களுக்குத் தேவைப்படுகின்ற தொல்பொருளியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்கான கோரிக்கைகள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் / பணிப்பாளர் (ஆய்வு) அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

மேலே

கட்டிடக் கலைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கான கோரிக்கைகள்

நினைவுச் சின்னங்களில் கட்டிடக்கலைகளைப் பேணிப்பாதுகாப்பதற்கான கோரிக்கைகள் தொல்பொருளியல் பணிப்பாளர் நாயகம் / பணிப்பாளர் (கட்டிடக்கலைப் பாதுகாப்பு) அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்

திங்கட்கிழமை, 28 டிசம்பர் 2015 09:43 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது