• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் எம்மைப்பற்றி அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள

நிறுவனக் கட்டமைப்பு

இன்றைய நிறுவனக் கட்டமைப்பு, அதன் பதவிவரிசையில் தேசிய மட்டத்திலும் பிரதேச மட்டத்திலும் 408 பதவியினர்களுடன் பல்வேறு துறைசார் சேவை வகுதிகளைக் கொண்டமைந்ததாகும்.  சில பதவிகள் நீண்ட காலமாக வெற்றிடமாக உள்ளதுடன், இந்நிறுவனக் கட்டமைப்பானது புதிய நிறுவனக் கட்டமைப்பின் மூலம் வெகு விரைவில் மீள் கட்டமைக்கப்பட உள்ளது 

அண்மைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பணிகளும் நீர்; வள சபை சட்டத்தில் விதித்துரைக்கப்பட்டுள்ள இசைவின்மைகளும் கடந்த காலத்தில் நிறைவேற்றி வைக்கப்படவில்லை என்பதை உணர்ந்த சபையானது, பாரிய மீள் கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றையும் அதற்கு இணையாக தொடர்புபட்ட சட்ட அதிகாரங்களையும் வினைப்படுத்தி ஒழுங்குமுறையாகத் தயாரிக்கத் தீர்மானித்துள்ளது. (வர்த்தமானப் பத்திரிகை அறிவித்தலின் இணைப்பு 1 இல் காண்க)

உத்தேச நிறுவனக் கட்டமைப்பு (உரு 1 இல் உள்ளவாறு) பணிப்பாளர் சபையினால் அனுமதிக்கப்பட்டுள்து. நீர்; வழங்கல், நீர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளரினால் அது (2008.02.28 ஆந் திகதியன்று) விதப்புரை செய்யப்பட்டதை அடுத்து, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 2008.07.15 ஆந் திகதிய உத்தேச நிறுவனக் கட்டமைப்பில் அடங்கியுள்ள 382 ஆக அமையும் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஒருசிலவற்றுக்கு உடன் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படாத போதிலும், அதன் மூலம் நீர் வள சபை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல துறைகளும் உள்ளடக்கப்படும்.

குறித்த திறைசேரி திணைக்களங்களினாலும் சம்பளங்கள், பதவியினர் ஆணைக்குழுவினாலும் உத்தேச நிறுவனக் கட்டமைப்பை காலத்திற்கு ஏற்ற வகையில் அனுமதிப்பதன் மீதே நீர்; வள சபையின் நியதிச்சட்ட திட்டத்தினதும் தொழிற்பாட்டுத் திட்டத்தினதும் வெற்றிநிலையும் அமுல்படுத்துகையும் தங்கியுள்ளது.

புதிய மீளமைப்பின் முக்கிய முன்னேற்றங்கள் காரணமாக இன்று போல் குழாய் நீர்க் கிணறுகளை அமைப்பதுடன் நின்றுவிடாமல், நீர் வள சபை சட்டத்தின் ஊடாக தமக்கு உரித்தாக்கப்பட்டுள்ள சகல செயற்பணிகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு நீர்; வள சபைக்கு ஆற்றல் கிட்டியுள்ளது. இக்கட்டமைப்பில் ஊழியர்களின் பதவி உயர்வுகள் தொடர்பான அபிலாசைகளும் பெரிதும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய நன்மைகளை எதிர்பார்க்கும் பெரும் எண்ணிக்கையானோரின் ஒத்தாசையுடன், தேசிய அளவில் நீர்; வள விடயம் தொடர்பான ஆலோசனை வழங்குதல், அமுல்படுத்தும் பொருட்டு சட்டவாக்கம் செய்யப்பட்டுள்ள கூறுகளாக உசிதமான மட்டத்தில் அதிகாரவாணையுடன் சிறந்த அனுபவமும் கல்வித் தகைமைகளும் கொண்ட தொழில்வாண்மையினர் நிறுவனத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும். இவ்வாறாக, இங்கு குறிப்பிடப்பட்ட புதிய கட்டமைப்பு, புதிய மேலதிக பொது முகாமையாளர் பதவிகள் சிலவற்றை அறிமுகப்படுத்தியதன் மூலம் உயர் உத்தியோகத்தர்கள் மிகையாக இருக்கும் ஒரு கட்டமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. உள்ளடக்க விடயப்பரப்பெல்லை மிகவும் விரிவடைந்திருந்த போதும் புதிய நிறுவனக் கட்டமைப்பில் 408 தொடக்கம் 382 வரையில் குறைவடைந்துள்ளது.