செயற்பாட்டுப் பரப்பெல்லை
நீர்; வள சபையின் செயற்பாட்டுப் பரப்பெல்லை குறித்து தெளிவாகப் புரிந்துகொள்வது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. நீர்; வள சபையின் செயற்பாட்டுப் பரப்பெல்லை சார்ந்த அலுவல்கள், 1964 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க நீர் வள சபை சட்டத்தின் 12, 14 ஆகிய உறுப்புரைகளில் (நீர் வள சபையின் நோக்கெல்லையை விரிவுபடுத்தும் நோக்குடன் 1999 ஆம் ஆண்டில் திருத்தத்திற்கு உட்படுத்திய) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, அரசாங்கத்திற்கு மதியுரை வழங்கல், வர்த்தக நடவடிக்கைகளைப் பொறுப்பேற்றல், குறிப்பிடப்பட்ட மதியுரைகளையும் சபையின் பணிகளையும் நிறைவேற்றுவதற்கு உசிதமான சட்டதிட்டங்களை இயற்றுதல் என்பன சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நீர் வள சபையின் செயற்பாட்டுப் பரப்பெல்லையைக் காண்பிக்கும் நிரல் வரைபு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது

திணைக்களங்களுக்கு இடையிலான மதியுரைக் குழு:-