• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் எம்மைப்பற்றி நோக்கங்கள்

நோக்கங்கள் - நீண்ட கால/ நடுத்தர கால/ குறுகிய கால

நீர் வளங்களின் அபிவிருத்தி, கண்டுபிடிப்பு, பல்நோக்கு உபயோகம், சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் சார்ந்த தேவைப்பாடுகளை நிறைவுசெய்வதற்கு பண்புத்தர ரீதியான பராமரிப்பொன்றுடன் பேண்தகு பயன்பாடு தொடர்பான தேசிய கொள்கைகளை வகுத்தமைக்கத் தூண்டுதல் அளிக்கும் ஆராய்ச்சிப் பங்களிப்பு.

மேலே 1 இல் குறிப்பிடப்பட்ட நோக்கங்களை மேலும் உறுதிப்;பாடடையச் செய்வதற்காக முறையாகவும் சரியாகவும் தரவுகளைத் திரட்டுதல், நாட்டின் நீர் வளங்கள் சார்ந்த ஆய்வுபூர்வ தரவுகளைப் பேணிச்செல்லல்.

அறிவை வழங்கவும் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் தொடர்புபட்ட 
(அ) பிரதேச ரீதியாக அதாவது, குறித்த உள்ளூராட்சி அதிகார சபைகள்
(ஆ). தேசிய மற்றும் சர்வதேச அமைப்பாண்மைகளை
(இ). நாட்டின் நீர் வளத்துடன் தொடர்புபட்ட பிற விஞ்ஞான ஆய்வுகளுடன் தொடர்புபடுதல்.

பாதுகாப்பாகவும் பேண்தகு அடிப்படையிலும் நீரைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கியத்துவம், எதிர்காலத்திற்காக நீர்; மாசடையச் செய்யாமல் பராமரிக்கும் பொறுப்பு ஆகிய விடயங்கள் தொடர்பாக சிவில் சமூகத்தை அறிவுறுத்துதல்.

நாட்டின் நீர் வளங்களை பேண்தகு அடிப்படையில் பயன்படுத்திக் கொள்வதுடன் தொடர்பாக மேலே இல. 03 இல் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களினால் உத்தேச/ பொறுப்பேற்ற கருத்திட்டங்கள் வாயிலாக பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மைகளையும் பொருளாதார சாத்தியக்கூறுகளையும் மதிப்பீடு செய்தல்.

நீர் வள சபை சட்டத்தின் பிரகாரம் நீர் வள சபையினால் ஆற்ற உத்தேசித்துள்ள மேலே குறிப்பிடப்பட்ட பணிகளுடன் தொடர்பாக, தேவையான சந்தர்ப்பங்களில் பங்கேற்புடன் செயலாற்றுவதற்குப் பெரிதும் அவசியமான பரஸ்பர புரிந்துணர்வை நன்கு உறுதிசெய்வதற்காக திணைக்களங்களுக்கு இடையிலான மதியுரைக் குழுவொன்றை அமைத்தல்.

நிலக்கீழ் நீரை உரிய கட்டுப்பாட்டு முறைகளைக் கடைப்பிடித்து சிக்கனத்துடன் பயன்படுத்துவதற்காக பிற வர்த்தக கூட்டுமுயற்சிகளுடன் நீரைப் போத்தல்களில் அடைக்கும் கருத்திட்டத்தை ஆரம்பித்தல்.
(அ). பொதுத் திறைசேரிக்கு சுமையாக இராமல் சுயாதீனமாக இயங்குதல்.
(ஆ). சுயாதீனத்தன்மையை எய்துவதற்காக தொழில் தராதரங்களை நிறுவுதல்.